பெண்ணை கட்டி வைத்து நகைகளை கொள்ளையிட்ட நபர்; வெளியான அதிர்ச்சி சம்பவம்.!
valoor - arakkonam - jwels ketnapping - mohan
தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளரையே கட்டிப்போட்டு அவரது நகைகளை கொள்ளையடித்த பெயிண்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள காளிவாரி கண்டிகை கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் ஏகநாதன், கவிதா. ஏகநாதன் கட்டிட ஒப்பந்தக்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு அவரது வீட்டில் பெயிண்டராக பணி புரிந்து வந்தவர் அம்மனூரை சேர்ந்த மோகன் என்ற மோகனரங்கன் (36).
ஒரு நாள் யாரும் வீட்டில் இல்லாத நிலையில் தனிமையாக இருந்த கவிதாவை, மோகன் கட்டிப்போட்டு கத்திமுனையில் அவரது தாலி, வளையல், மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகளை கொள்ளையடித்த தலைமறைவாகிவிட்டார்.
இது தொடர்பான வழக்கு வேலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் குற்றவாளி மோகனரங்கத்தின் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து காவல்துறையினர் மோகனரங்கத்தை பலத்த பாதுகாப்புடன் வேலூர் சிறையில் அடைத்தனர்.