மதுபோதைக்கு அடிமையான வணக்கமுங்கோ ஷீலாவின் கணவர் : வீடியோ வெளியிட்டு கண்ணீர் குமுறல்.!
மதுபோதைக்கு அடிமையான வணக்கமுங்கோ ஷீலாவின் கணவர் : வீடியோ வெளியிட்டு கண்ணீர் குமுறல்.!
வணக்கமுங்கோ ஷீலாவின் கணவர் மதுபோதைக்கு அடிமையாகியது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
டிக் டாக் மூலமாக மக்களிடையே பிரபலமானவர்கள் ஷீலா. இவர் தனது பெற்றோரை எதிர்த்து நெல்லை சிவா என்ற நபரை காதலித்து கரம்பிடித்தார். அவரும் டிக் டாக் பிரபலம் ஆவார்.
இந்த இரண்டு பிரபலமும் தங்களின் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களுக்கு தெரிந்த நபர்கள் செய்த உதவியால் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.
சமீபத்தில் கர்ப்பமாக இருந்த ஷீலாவுக்கு குழந்தை கலைந்துவிட்டதாகவும் வீடியோ பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், அடுத்தடுத்த பிரச்சனையால் விரக்தியில் இருந்த சிவா குடிக்கு அடிமையாகியுள்ளார்.
அவர் தினமும் வேலைக்கு செல்லாமல் மதுபோதையில் சுற்றிவரும் நிலையில், சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றவர் இரவில் வீட்டிற்கு வராமல் போதையில் காட்டுப்பகுதியில் உறங்கிவிட்டார்.
மறுநாள் காலையில் ஷீலா தனது கணவரை தேடி, அக்கம் பக்கத்தினர் கூறிய தகவலை கேட்டு சிவாவை கண்டறிந்தார். அவர் தனது கணவரை கண்டிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
குடி குடியை கெடுக்கும், உடல் நலத்தை சீரழிக்கும், உயிரை காவு வாங்கும்.