லிப் சர்வீஸ் மட்டுமே செய்பவர் கமல்ஹாசன்.! சர்ச்சையை கிளப்பிய வானதி சீனிவாசன்.!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை அடுத்து அனைத்து கட்ச
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், கோவை தெற்குத் தொகுதியில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இடையே தேர்தல் பிரசாரத்தில் வார்த்தைப் போர் துவங்கியுள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளருமான வானதி சீனிவாசன் துக்கடா அரசியல்வாதி என மக்கள் நீதி மைய தலைவரும் நடிகருமான கமலஹாசன் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இன்று கோவை தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வானதி சீனிவாசன் கமல்ஹாசன் பற்றி சர்ச்சையாக பேசியுள்ளார். அவர் பேசுகையில், என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்கின்றனர் மக்கள் நீதி மையம் கட்சியினர். இதுவரை மக்களுக்கு என்ன சேவை அவர்கள் செய்துள்ளனர். இதுவரை அவர் லிப் சர்வீஸ் மட்டுமே செய்து வந்துள்ளார். உதட்டளவிலும் உதடுகளுக்கும் மட்டுமே சேவை செய்து வந்தவர் கமலஹாசன். எனவே மக்கள் தங்களது வாக்குகளின் மூலம் கமலஹாசனுக்கு பதில் சொல்ல வேண்டும் என வானதி சீனிவாசன் பேசினார்.