குறவர் சமுதாய மக்கள் தலைவரை இழிவுபடுத்தினரா அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்?.. பரபரப்பு புகார்..!
குறவர் சமுதாய மக்கள் தலைவரை இழிவுபடுத்தினரா அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்?.. பரபரப்பு புகார்.. பாய்கிறது பி.சி.ஆர்?..!
தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் வனவேங்கைகள் கட்சி தலைவர் இரணியன் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், "நான் குறவர் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்குதல் தொடர்பான விவகாரத்திற்க்கு அமைச்சர் கே.ஏக்.எஸ்.எஸ். இராமச்சந்திரனிடம் மனு வழங்க அவரது வீட்டிற்கு சென்று இருந்தேன்.
அப்போது, அமைச்சர் எங்களை நாற்காலியில் அமரக்கூட வைக்கவில்லை. மாறாக எங்களை நிற்கவைத்து ஒருமையில் பேசினார். மேலும், நான் அமைச்சரை நெருங்கி மனுவின் சாராம்சம் குறித்து பேச தொடங்க முயற்சி செய்கையில், தள்ளி நின்று பேசு என்று தீண்டாமை செயலில் ஈடுபட்டார்.
எங்களது சமுதாயத்தை காரணம் காண்பித்து தீண்டாமை செயலில் ஈடுபட்ட அமைச்சரின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.