தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடும் அனல் காற்று; வானிலை மையம் எச்சரிக்கை.!
vanilai nilavaram tamilnadu - trichy, dharmapuri, koyamputhoor
தமிழகத்தில் தொடர்ந்து அனல் காற்று வீசி வரும் நிலையில், மாநிலத்தில் மொத்தம் மூன்று மாவட்டங்களில் 40 டிகிரி செல்ஷியஸுக்கும் மேற்பட்ட வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
அதன்படி, தமிழகத்திலேயே அதிகப்பட்சமாக தர்மபுரியில் வெப்பநிலை 40.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இது தர்மபுரியில் கடந்த 20 ஆண்டுகளில், மார்ச் மாதத்தில் உணரப்பட்ட அதிகப்பட்ச வெப்பநிலை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாளில் தமிழகத்தின் திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் 40 டிகிரி செல்ஷியஸுக்கு மேற்பட்ட வெப்ப நிலை பதிவாக வாய்ப்புள்ளது. மேலும், நாளையும் இந்த பகுதிகளில் இதே வெப்பநிலை தொடரும் என சொல்லப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தின் மத்திய மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அனல் காற்று வீசும். சென்னையில் வழக்கம் போல வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.