வெறிச்சோடி காணப்படும் வந்தவாசி! வீட்டிற்குள்ளே முடங்கிய பொதுமக்கள்!
Vanthavasi people stayed at home
சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. அதிலும் தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 150க்கும் மேற்ப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக அளவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பிரதமர் மோடியின் ஆலோசனை படி, நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்க காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
இந்தநிலையில், சுய ஊரடங்கை முன்னிட்டு நாடு முழுவதும் திரை அரங்குகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், சிறிய, பெரிய கடைகள் ரயில், பஸ், விமான போக்குவரத்துகள் இன்று இயங்கவில்லை.
அதேபோல், வந்தவாசியில் இன்று ஒரு நபர் கூட வெளியே வராமல் சுய ஊரடங்கை கடைபிடித்துள்ளனர். அப்பகுதி முழுவதும் மக்களே வாழாத ஊர் போல் இன்று காட்சியளித்தது. அதேபோல் தமிழகத்தில் இன்று அணைத்து மாவட்டங்களும் வெறிச்சோடி காணப்பட்டது.