சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் வசந்தகுமார் உடல்! மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த்!
vasanthakumar funerl in nhis native
கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற சுறுப்பினர் வசந்தகுமார், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வசந்தகுமார் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரின் உயிரிழப்பிற்கு பிறகு மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. இதனையடுத்து வசந்த் குமார் உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களின் அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு சத்தியமூர்த்தி பவனுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள், ஊர்மக்களுடன் இறுதி சடங்கு நாளை நடைபெறும் என்பதால், காலதாமதம் ஏற்படும் என்பதற்காக சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்படவில்லை என்றும் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தெரிவித்தார். மேலும், அப்பாவிற்கான இறுதிச்சடங்கு சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் நாளை மாலை நடைபெறும் என்று வசந்தகுமார்ன் மகன் விஜய் வசந்த் கூறியுள்ளார்.