தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்! உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு!
Vedanta appeals to Supreme Court
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம், வன்முறையாக மாறியது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்த 2018ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என்றும், ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் பொதுமக்களுக்கு நோய்கள் வருகிறது. அதனால் அந்த ஆலையை திறக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் கடந்த 18 ஆம் தேதி வழங்கினர்.. அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உயர்நீதிமன்றம் . தமிழக அரசின் தடை நடவடிக்கை தொடரும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.