வரத்து குறைவால் கிடுகிடுவென உயர்ந்த காய்கறி விலை.. கவலையில் இல்லத்தரசிகள்..!!
வரத்து குறைவால் கிடுகிடுவென உயர்ந்த காய்கறி விலை.. கவலையில் இல்லத்தரசிகள்..!!
கடந்த சில நாட்களாகவே சென்னையை பொருத்தமட்டில் காய்கறிகளின் விலையானது திடீரென உயர்ந்து வருகிறது. நேற்று தக்காளி, பீன்ஸ், அவரை, இஞ்சி போன்றவற்றின் விலை கடந்த வாரத்தில் இருந்து இரண்டு மடங்கு கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று முகூர்த்த நாள் என்பதால் கத்தரிக்காய் கிலோ ரூ.90-க்கும், பீர்க்கங்காய் ரூ.60-க்கும், புடலங்காய் கிலோ ரூ.50-க்கும், தக்காளி ரூ.40-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.30-க்கும், சின்ன வெங்காயம் ரூ.80-க்கும், கேரட் ரூ.65-க்கும், பாகற்காய் ரூ.60-க்கும், பீன்ஸ் ரூ.80-க்கும், முருங்கைக்காய் ரூ.80-க்கும், வெண்டைக்காய் ரூ.70-க்கும், பீட்ரூட் ரூ.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல இஞ்சியின் வரத்து குறைந்துள்ளதன் காரணமாக ஒரு கிலோ இஞ்சியானது ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர்.