×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேலூர் மக்களவை தொகுதி கதிர் ஆனந்த் வசமானது எப்படி?.. வெளியான சுவாரஷ்ய தகவல்..! இதை யாருமே எதிர்பார்க்கலையே.! 

வேலூர் மக்களவை தொகுதி கதிர் ஆனந்த் வசமானது எப்படி?.. வெளியான சுவாரஷ்ய தகவல்..! இதை யாருமே எதிர்பார்க்கலையே.! 

Advertisement

 

இந்திய அளவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் 2024 நடைபெறுவதாக அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், ஒரேகட்டமாக ஜூன் 04ம் தேதி தேர்தல் முடிவுகளை வெளியிடுகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில், ஆளும் திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக, சி.பி.ஐ., சி.பி.ஐ.எம் உட்பட பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. திமுக நேரடியாக 21 தொகுதிகளில் களமிறங்குகிறது. கூட்டணி கட்சியினருக்கும் உரிய மரியாதை தந்து, அவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தும் பொருட்டு பிற 19 தொகுதிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. 

திமுகவின் சார்பில் தூத்துக்குடி- கனிமொழி, தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார், வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி,  தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன், மத்தியசென்னை- தயாநிதி மாறன், 6,ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு, காஞ்சீபுரம் - ஜி.செல்வம், அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன், திருவண்ணாமலை- அண்ணாதுரை, தர்மபுரி- ஆ.மணி, ஆரணி-தரணிவேந்தன், வேலூர்- கதிர் ஆனந்த், கள்ளக்குறிச்சி- மலையரசன், சேலம்-செல்வகணபதி, கோயம்புத்தூர் - கணபதி ராஜ்குமார், பெரம்பலூர் - அருண் நேரு, நீலகிரி - ஆ.ராசா, பொள்ளாச்சி- ஈஸ்வரசாமி, தஞ்சாவூர் - முரசொலி, ஈரோடு-பிரகாஷ், தேனி- தங்க தமிழ்செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

இதில் வேலூர் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக போட்டியிட திமுக தலைமை குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ள கதிர் ஆனந்த் (Kathir Anand), தொடர்ந்து இரண்டாவது முறை வேலூர் தொகுதியில் இருந்து களம்காண்கிறார். கடந்த முறை மக்களை தேர்தலில் களம்கண்டு மக்களின் ஆசியுடன் வெற்றியடைந்த கதிர் ஆனந்த், தொகுதியில் சத்துவாச்சாரி பகுதியில் சுரங்கப்பாதை, கே.வி குப்பம் சுங்கச்சாவடி அகற்றல், வாணியம்பாடி மேட்டுப்பாளையம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அமைத்துக்கொடுத்ததற்கான பணியை தொடங்கி வைத்தல், மக்களுக்கான மருத்துவ முகாம்கள், அரசின் திட்டங்களை அறிந்துகொள்ளும் விழிப்புணர்வுகள் என நலப்பணிகளை செய்து வந்தார். இதனால் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார். 

அதேபோல, தனது தொகுதிக்குட்பட்ட அணைக்கட்டு, கே.வி குப்பம் தனி, குடியாத்தம் தனி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய தொகுதிகளின் வளர்ச்சிக்கும், அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு இருக்கிறார். இவை அனைத்தும் அசைக்க முடியாத நம்பிக்கை, மக்கள் செல்வாக்கை கதிர் ஆனந்துக்கு ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் தொகுதி மக்களுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் குரல் கொடுத்து வந்தார். இதனால் தற்போதைய தேர்தலிலும் தன்னை மக்கள் பணியில் ஈடுபடுத்திக்கொண்டவர், தொடர்ந்து மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலிக்க திமுக தலைமையிடம் விருப்பமனுவையும் வாங்கி இருந்தார். 

சமீபத்தில் திமுக தலைமை திமுக தேர்தல் அறிக்கையுடன், 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களையும் இறுதி செய்து அவர்களின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, வேலூர் தொகுதி கதிர் ஆனந்துக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டது. இத்தொகுதி மீண்டும் கதிர் ஆனந்துக்கு வழங்கப்பட்டாலும், அது இம்முறை எளிதாக அமைந்துவிடவில்லை. திமுகவின் பொதுச்செயலாளர் மற்றும் கலைஞரின் செல்லப்பிள்ளையாக இருந்து வரும் துரைமுருகன் மகன் என்பதனால் மட்டும் அது சாத்தியப்படவில்லை. ஏனெனில், இம்முறை வேலூர் தொகுதியில் இருந்து விருப்பமனுவை 10 பேர் வாங்கி இருக்கின்றனர். 10 பேரில் சிறந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதால், வேலூர் தொகுதி தேர்வு இம்முறை திமுக தலைமைக்கு பெரும் சாதனையாகவும் அமைந்து இருக்கிறது. 

விருப்பமனு வாங்கிய நபர்கள் தங்களுக்கான கோரிக்கைகளை முன்வைக்க, கதிர் ஆனந்துக்கு போட்டியாகவும், அவரை போல மக்கள் பணியாற்ற வேண்டும் ஆவலுடனும் நேர்காணல் நடந்து முடிந்துள்ளது. இவர்களில் யார் சிறந்தவர்கள்? என்பதை தேர்வு செய்ய தலைமை குழு கடந்த 5 ஆண்டுகளாக கழகத்தின் பணிகளை திறம்பட செய்தவர்கள், மக்கள் பணியை செய்தவர்கள், அவர்களுக்காக துணை நின்றவர்கள் என்ற விபரங்களை சேகரித்து இருக்கின்றனர். அதன்படி, தனது தொகுதிகளாக உழைத்து வந்த கதிர் ஆனந்த், 5 சட்டப்பேரவை தொகுதிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களையும் ஒருங்கிணைத்து செய்த மக்கள் பணிகள் அவருக்கான வாய்ப்பை வழங்க முக்கிய காரணமாக அமைந்து இருக்கிறது. 

அவருக்கென துரைமுருகன் மகன் என பேசினாலும், களத்தில் இன்று திறம்பட உழைத்து மக்கள்பணி செய்பவருக்கே தேர்தலில் வெற்றிவாய்ப்பு கிடைக்கும் என்பது நாடறிந்த உண்மை. அந்த வகையில், மக்கள் பணியை மேற்கொள்ள முதல் முறையாக 2019ல் தேர்வு செய்யப்பட்ட கதிர் ஆனந்த், தொடர்ந்து அப்பணியை செய்ததாலேயே மீண்டும் அவருக்கான வாய்ப்பு திமுக தலைமையால் வழங்கப்பட்டு இருக்கிறது. மேற்படி எஞ்சியுள்ள நாட்களில் மேற்கொள்ளும் கடும் உழைப்பு அவருக்கான வெற்றிக்கு வழிவகை செய்யும். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vellore #tamilnadu #politics #dmk #Kathir Anand
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story