அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.26 இலட்சம் கடன் வாங்கி முதலீடு.. நிறுவனம் கம்பி நீட்டியதால் இளைஞர் விபரீதம்.!
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.26 இலட்சம் கடன் வாங்கி முதலீடு.. நிறுவனம் கம்பி நீட்டியதால் இளைஞர் விபரீதம்.!
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், காந்தி நகர் கல்லேரி கிராமத்தில் வசித்து வருபவர் பிரசாத் (வயது 39). ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். பிரசாத்தின் மனைவி தனலட்சுமி. தம்பதிகளுக்கு ஒரு வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது.
இவர்கள் அனைவரும் ஸ்ரீபெரும்புதூரில் தங்கியிருந்துள்ளனர். அப்போது, காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் பழக்கமாகி, அவரின் மூலமாக தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.26 இலட்சம் கடன் வாங்கி முதலீடு செய்து இருக்கிறார். அந்த நிறுவனம் திடீரென மூடப்பட்ட நிலையில், நிறுவனத்தின் உரிமையாளர்கள் பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர்.
இதனால் பிரசாத்திடம் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க, கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊர் சென்றவர் கடன் தொல்லையால் மனமுடைந்து வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய கடிதம் காவல் துறையினரின் விசாரணைக்கு பின்னர் கைப்பற்றப்பட்டது.
அந்த கடிதத்தில், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கி பணம் செலுத்தினேன். பணம் கொடுத்த ஏஜெண்டுகள் கைது செய்யப்பட, நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாக, கடன் தொல்லையால் நான் மரணிக்கிறேன். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசு, காவல்துறையினர் பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.