16 வயது சிறுமியை காதலில் வீழ்த்தி, கடத்தி பலாத்காரம்..! மிஸ்டு கால் அழைப்பில், பேரதிர்ச்சி சம்பவம்..!
16 வயது சிறுமியை காதலில் வீழ்த்தி, கடத்தி பலாத்காரம்..! மிஸ்டு கால் அழைப்பில், பேரதிர்ச்சி சம்பவம்..!
மிஸ்டு கால் அழைப்பில் சிறுமிக்கு காதல் வலைவீசி, அவரை கடத்தி கற்பழித்த துயரம் வேலூர் அருகே நடந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். இவரின் அலைபேசி எண்ணுக்கு கடந்த வருடம் மிஸ்டு கால் வந்துள்ளது. அந்த எண்ணிற்கு மீண்டும் மாணவி தொடர்பு கொண்டு இருக்கிறார்.
மறுமுனையில் பேசியவர், தன்னை திருவள்ளூர் மாவட்டம் தரைச்சி ஊத்துக்கோட்டை பழைய காலனியை சேர்ந்த மெக்கானிக் ஜான்ரோஸ் (வயது 19) என்று தெரிவித்துள்ளார். மேலும், நண்பருக்கு தொடர்பு கொள்ள முயற்சித்து அழைப்பு தவறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
பின்னர், அவ்வப்போது சிறுமிக்கு போனில் தொடர்பு கொண்ட ஜான் ரோஸ், காதல் வலைவீசுவதை போல பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டுள்ளார். கயவனின் பேச்சில் உள்ள விபரீதம் புரியாத சிறுமியும், அவனின் பேச்சுக்கு மயங்கியுள்ளார். இதனால் இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர்.
வேலூருக்கு அவ்வப்போது சென்று சிறுமியை நேரில் சந்தித்துவிட்டும் வந்த நிலையில், கடந்த 11 ஆம் தேதி வேலூருக்கு சென்ற ஜான் ரோஸ், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். மகள் வீட்டிற்கும் நீண்ட நேரம் ஆகியும் வரத்தால் பதறிப்போன பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் இல்லத்தில் தேடியுள்ளனர்.
எங்கு தேடியும் மகள் கிடைக்காததால், பதைபதைப்புக்கு உள்ளாகிய பெற்றோர் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணையை தொடங்கியபோது முதலில் துப்பு கிடைக்காத நிலையில், அவரின் அலைபேசியை ஆய்வு செய்தபோது ஜான் ரோஸுடன் அடிக்கடி பேசுவது உறுதியானது.
இதனையடுத்து, ஜான் ரோசின் வீட்டிற்கு சென்ற காவல் துறையினர், சிறுமியை மீட்டு வேலூருக்கு அழைத்து வந்தனர். மேலும், ஜான் ரோசும் கைது செய்யப்பட்டார். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது உறுதியாகவே, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் ஜான்ரோசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.