#JustIN: இருசக்கர வாகனத்தின் மீது உரசிய லாரி.. நிலைதடுமாறி விழுந்ததில் கணவர் கண்முன் மனைவி பலி.!
#JustIN: இருசக்கர வாகனத்தின் மீது உரசிய லாரி.. நிலைதடுமாறி விழுந்ததில் கணவர் கண்முன் மனைவி பலி.!
லாரியின் சக்கரம் ஏறி - இறங்கியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சேரி பகுதியில் வசித்து வரும் நபர் ஜான்சன். இவரின் மனைவி புஷ்பராணி. இவர்கள் இருவரும் தங்களின் இருசக்கர வாகனத்தில், வேலூர் புதிய பேருந்து நிறுத்தம் கிரீன் சர்க்கிள் பகுதியில் சென்றுள்ளனர்.
அச்சமயம், இருசக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த லாரி ஒன்று, தம்பதியின் இருசக்கர வாகனத்தில் லேசாக உரசியுள்ளது. இந்த சம்பவத்தில் தம்பதி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தனர்.
இதையும் படிங்க: தறிகெட்ட வேகத்தால் சறுக்கல்.. கல்லூரி மாணவர் தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலி., பதறவைக்கும் காட்சிகள்.!
சக்கரத்தில் சிக்கி சோகம்
இதில் லாரியின் பின்சக்கரம் புஷ்பராணியின் மீது ஏறி-இறங்கியது. இந்த சம்பவத்தில் ராணி நிகழ்விடத்திலேயே கணவர் கண்முன் உயிரிழந்தார். மேலும், ஜான்சன் படுகாயமடைந்தார்.
காவல்துறை விசாரணை
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவசர ஊர்தி உதவியுடன் ஜான்சனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புஷ்பராணியின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் வேலூர் - காட்பாடி சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஐடி பெண் ஊழியர், சாலையோரம் இருந்த மணல் காரணமாக வாகனத்தில் இருந்து தடுமாறி விழுந்து பலியானார்.
இதையும் படிங்க: சகோதரரின் கண்முன் தலை நசுங்கி உயிரிழந்த தங்கை.. வேலூரில் துயரம்.. ஐடி ஊழியருக்கு நேர்ந்த நிலை.!