15 வயது முதல்... கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை..... வேலூர் பாதிரியார் கைது.!
15 வயது முதல்... கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை.... வேலூர் பாதிரியார் கைது.!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழக்கோட்டை கிராமத்தைச் சார்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த வழக்கில் பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பாதிரியார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழக்கோட்டை என்ற கிராமத்தில் ஆசிர்வாத சகோதர சபை என்ற பெயரில் பெந்தகோஸ்தே தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலயத்திற்கு வேலூரைச் சார்ந்த வினோத் ஜோஸ்வா(40) என்பவர் பாதிரியாராக இருந்து வந்துள்ளார்.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தபோது 15 வயதுடைய சிறுமி ஒருவரை மிரட்டி தொடர் பானியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக வெளியே கூறினால் அந்த பெண்ணை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார் பாதிரியார் ஜோஸ்வா. இந்நிலையில் அந்த பெண்ணிற்கு கடந்த வருடம் திருமணமாகி தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இந்நிலையில் மீண்டும் அந்தப் பெண்ணை வாட்ஸ்ஆப் மற்றும் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பாதிரியார் மீண்டும் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இவரது தொடர் தொல்லையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இவருக்கு எதிராக புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் உத்தரவின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா தலைமையிலான காவல்துறையினர். இந்த வழக்கை விசாரித்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு முன்பு வைத்து பாதிரியார் ஜோஸ்வாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பெண் 15 வயது சிறுமியாக இருந்த போதே பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.