600க்கு 600 எடுத்து சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு தளபதி விஜய் கொடுத்த அசத்தல் பரிசு.!
600க்கு 600 எடுத்து சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு தளபதி விஜய் கொடுத்த அசத்தல் பரிசு.!
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை, நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தளபதி விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்தும் விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் தனது கையால் பொன்னாடை போர்த்தி கௌரவித்து சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையை வழங்கினார். இதில் முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரம், இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு ரூ 15 ஆயிரம், 3ஆம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ 10 ஆயிரம் பரிசுத்தொகை காசோலையாக வழங்கபட்டதாம்.
மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து 600க்கு 600 எடுத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் ஒன்றை விஜய் பரிசாக வழங்கினார். மேலும் அதனை அவரது அம்மாவிடம் கொடுத்து நந்தினிக்கு போடக் கூறி அழகு பார்த்துள்ளார்.