தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

25 நாட்கள்.. தேதி குறித்த விஜய் - வெளியான தகவல்.!

25 நாட்கள்.. தேதி குறித்த விஜய் - வெளியான தகவல்.!

Vijay Made Decision to Enter Fully Politics after 25 days  Advertisement

 

2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி என்ற இலக்குடன், நடிகர் விஜய் தனது திரையுலக பயணத்தை விட்டுவிட்டு, தமிழக மக்களுக்காக அரசியலில் களமிறங்கி இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் நியமனம் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. தற்போது ஜனநாயகன் படப்பிடிப்புடன், கட்சி செயல்பாடுகளை விஜய் கவனிக்கிறார்.

இந்நிலையில், வரும் 25 நாட்களில் ஜனநாயகன் படப்பிடிப்பை நிறைவு செய்யும் நடிகர் விஜய், அதிரடி அரசியலில் களமிறங்க இருக்கிறார். பூத் கமிட்டி மாநாட்டுக்கு பின்னர், மண்டலா அளவிலான மாநாடு, பொதுக்கூட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல் விவகாரம்; தவெக தலைவரின் அதிரடி.. திமுகவு குறித்து கடும் விமர்சனம்.!

vijay

ஒரு மாதத்தில் தீவிர அரசியலில் களமிறங்கும் விஜய்

ஏப்ரல் மாதத்தின் இறுதியில் விஜய் அரசியலில் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்ட பின்னர் அவர் அரசியலில் களமிறங்கி அதிரடியாக செயல்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுவதால், கட்சியினரும் அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

நடிகர் விஜயின் அரசியல் வருகை வாக்குகளை கட்டாயம் மடைமாற்றம் என்பதால், அவரை கூட்டணியில் தக்க வைக்க ஒருபுறம் முயற்சி நடக்கிறது. மறுபுறம் தனது ரசிகர்களின் செல்வாக்கு வைத்து, தன்னை முக்கிய கட்சியாக நிலைநிறுத்த விஜய் தரப்பிலும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
 

இதையும் படிங்க: #Breaking: "திமுக பெண்களை ஏமாற்றிவிட்டது.. நாமும் ஒட்டு போட்டோமே" - நடிகர் விஜய் பரபரப்பு வீடியோ.. மகளிர் தின வாழ்த்துடன் ட்விஸ்ட்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #TVK Vijay #tamilnadu #விஜய் #அரசியல் #தமிழ்நாடு #ஜனநாயகன்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story