#BREAKING : அரசியல் கட்சி தொடங்குகிறார் விஜய்..! கட்சியின் பெயர் பதிவு? தீயாக பரவிய தகவலின் உண்மை என்ன?
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்க தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்க தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என ஒரு தகவல் வைரலானநிலையில் அது வெறும் வதந்தி என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும், அரசியலுக்கு வர இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் விஜய்யும் பல்வேறு மேடைகளில் அரசியல் கலந்த டயலாக்குகளை பேசிவந்தார்.
அதேபோல் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி அவர்களும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவ்வப்போது கருத்துக்களை கூறிவந்தார். இந்நிலையில்தான் விஜய் சமீபத்தில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசானை கூட்டம் நடத்தியநிலையில் விஜய் அரசியலில் களமிறங்க ஆயத்தமாகிவிட்டாரா என்ற கேள்வியை எழுப்பியது.
இந்நிலையியல் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்து தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது எனவும், கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர் பெயர் வழங்கப்பட்டுள்ளது எனவும் ஒரு தகவல் தமிழகத்தில் வைரலானது.
இந்நிலையில் இந்த தகவல் குறித்து விளக்கமளித்துள்ள விஜய்யின் மக்கள் தொடர்பாளர், "கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் விஜய் என்ற செய்தி தவறானது எனவும் அது முற்றிலும் பொய்யான தகவல்" எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.