கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை..! உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி.! உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவ
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்கள பணியாளர்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றனர். அரும்பணியாற்றி வரும் மருத்துவர்கள் சிலர் இதனால் தங்களது உயிரை அர்ப்பணிக்கும் கோரமான சம்பவம் நிகழ்ந்து வருகிறது.
இந்தநிலையில், மதுரையைச் சேர்ந்த பெண் மருத்துவர் சண்முகப்ரியா அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றி வந்துள்ளார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த போதிலும் தனது கடைமையை ஆற்றி வந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதாரத்துறையில் பணிபுரிந்த 8 மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர் சண்முகப்பிரியா மரணம் குறித்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இது தெடர்பாக முன்னாள் அமைச்சர், தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில், "முன்களப்பணியில்
முந்தியது உன் சேவை... மரணத்திலும் நீ முந்துவாய் என்று சற்றேனும் சிந்திக்கவில்லை... நீ நினைக்கப்படுவாய் சகோதரி உலகத்தின் கடைசி துளிவரை.. வணங்குகிறேன்" என பதிவிட்டுள்ளார்.