×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கேன்.. அறிவிப்பீங்களா. மாட்டிங்களா.? அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் நள்ளிரவையும் தாண்டி நீடித்த வாக்கு எண்ணிக்கை.!

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்ட

Advertisement

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வந்த நிலையில், திமுக 160 இடங்களிலும், அதிமுக 74 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இந்தநிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலை தொகுதியில் நள்ளிரவையும் தாண்டி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இறுதியாக விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட்டன. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்ட விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்கு எண்ணிக்கையின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள எண்ணுக்கும், ஆவணங்களில் இருந்து எண்ணுக்கும் வித்தியாசம் காணப்பட்டது.

இதனால் பல முறை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதால் விராலிமலை தொகுதியில் முடிவு வெளியாவதில் தாமதம் ஆனது. இருப்பினும் 23வது சுற்று முடிவில் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் 19,044 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பனை விட 23,644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக விராலிமலை தொகுதியில் எனது வெற்றியை அறிவிப்பதில் ஏன் தாமதம் என்று  சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பி இருந்தார். வாக்கு எண்ணிக்கை தொடங்கி 24 மணி நேரத்தை கடந்துவிட்டது என்று ஆதங்கம் தெரிவித்த அவர், 23 சுற்று முடிந்துவிட்டது ஆனாலும் பல மணி நேரமாக முடிவுக்கு காத்திருப்பதாக விரக்தியை வெளிப்படுத்தி, உடனடியாக தனது வெற்றியை அறிவித்து வெற்றி சான்றிதழை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Admk #Vijayabaskar
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story