×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனாவில் இருந்து மீண்ட விஜயகாந்த் மற்றும் பிரேமலதா.! மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை!

vijayakanth and premalatha cured from corona

Advertisement

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு சமீபத்தில் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 22 ஆம் தேதி நடந்த மருத்துவ பரிசோதனையில் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையில் விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள அதே மருத்துவமனையில் பிரேமலதா விஜயகாந்தும் அனுமதிக்கப்பட்டார். 

இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் அவர்களது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்திருந்தது.  இந்த நிலையில் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijayakanth #Premalatha #corona
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story