தேமுதிக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்த விஜயகாந்த்.! கடும் ஏமாற்றத்தில் தொண்டர்கள்.!
நேற்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலி
நேற்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பொதுமக்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
நேற்று நடைபெற்ற தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அமமுக முதலமைச்சர் வேட்பாளர் டிடிவி தினகரன், திமுக முதலமைச்சர் வேட்பாளர் மு.க. ஸ்டாலின், ம.நீ.ம. முதலமைச்சர் வேட்பாளர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சீமான், திரை நட்சத்திரங்கள் ரஜினி, அஜித், விஜய் என அனைவரும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
இந்தநிலையில், விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி பள்ளியில், நேற்று காலை 7 மணிக்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மட்டும் வந்து வாக்களித்தார். அப்போது விஜயகாந்தும், தன் மகன்களும் பின்னர் வந்து வாக்களிப்பார்கள் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, பிற்பகலில் விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோர் வந்து வாக்களித்துச் சென்றனர்.
விஜயகாந்த் மாலையில் வந்து வாக்களிப்பார் என் விஜய் பிரபாகரன் கூறினார். அதனால், விஜயகாந்தின் வருகையை தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் வாக்குப்பதிவு நிறைவடையும் 7 மணி வரையிலும், விஜயகாந்த் அங்கு வரவில்லை. இதனால் அங்கு காத்திருந்த தேமுதிகவினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்து வீடு திரும்பினர்.