விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து நாசாவுக்கு உதவிய மதுரை இளைஞர்!
vikram lander has been found by nasa
நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்ய சென்ற விக்ரம் லேண்டர் தரையிறங்க முற்பட்ட போது விக்ரம் லேண்டர் மோதிய பகுதியை நாசா கண்டறிந்து புகைப்படம் வெளியிட்டு உள்ளது.
சந்திரயான்2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய இஸ்ரோ சார்பில் விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது. நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து பின் லேண்டர் குறித்த எந்த தகவலும் இஸ்ரோவுக்கு கிடைக்கவில்லை. பல்வேறு முயற்சிகளுக்குப்பின், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என இஸ்ரோ அறிவித்தது. இதனைத்தொடர்ந்து இஸ்ரோ, நாசாவுடன் இணைந்து விக்ரம் லேண்டரை தேடத் தொடங்கியது.
இந்தநிலையில் தற்போது விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டுபிடித்து புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. இதற்கு மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் தான் நாசாவுக்கு உதவினார் என்பது தெரியவந்துள்ளது.
மதுரையை சேர்ந்த சண்முக சுப்ரமணியன் என்பவரால் விக்ரம் லேண்டரின் உடைந்த பகுதிகள் அடையாளம் காணப்பட்டன என்பதை குறிக்கும் வகையில் எஸ் என்ற எழுத்து காட்டப்பட்டு அந்த புகைப்படத்தில் உள்ளது.