நாளை விக்கிரவண்டியில் மழை பெய்யுமா? டெல்டா வெதர்மேன் முக்கிய எச்சரிக்கை... தவெக நிர்வாகிகளே உஷார்.!
நாளை விக்கிரவண்டியில் மழை பெய்யுமா? டெல்டா வெதர்மேன் முக்கிய எச்சரிக்கை... தவெக நிர்வாகிகளே உஷார்.!
பல மெனக்கெடலுடன் தயாராகி வரும் தவெக மாநாட்டை ஒட்டி, வருண பகவான் சற்று ஓய்வெடுக்கலாம் எனினும், வாயு பகவான் - சூரிய பகவான் இணைந்து வெப்ப அலை சார்ந்த பிரச்சனையை விக்ரவாண்டியில் உண்டாக்கலாம் என தெரியவந்துள்ளது.
நடிகர் விஜய் 2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக வைத்து, தனது விஜய் ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி இருக்கிறார். தவெக-வின் முதல் மாநில மாநாடு, நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
இதையும் படிங்க: #Breaking: "செயல்மொழியே நமது அரசியல்" - தவெக விஜய் அதிரடி அறிக்கை.!
இந்த மாநாட்டில் 15 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் விசாரிக்கப்பட்டு, அதற்கான உரிய அனுமதியும் வழங்கப்பட்டது.
நாளை மழை வேண்டாம் என வழிபாடு
தொடர்ந்து கடந்த சில நாட்களாக மேடை அமைப்பது, நிலத்திற்குள் சாலை அமைத்தல் போன்ற பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்றன. சில வாரங்களுக்கு முன்பு அங்கு திடீர் மழையும் பெய்ததால், அக்கட்சியினர் நாளை (அக்.27 ) அன்று விழுப்புரத்தில் மழை பெய்ய வேண்டாம் என சிறப்பு யாகமும் நடத்தி இருந்தனர்.
இதனிடையே, தனியார் வானிலை ஆய்வு மைய ஆர்வலர் ஹேமசந்திரன் என்ற டெல்டா வெதர்மேன் தகவலின்படி, "விக்ரவாண்டியில் நாளை பகலில் தெளிவான வானத்துடன் வெப்பமான சூழ்நிலை நிலவும். பகல்நேர வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியஸ் இருக்கும். இரவில் பனிப்பொழிவு இருக்கும்.
வெப்ப அலை எச்சரிக்கை
பிற்பகல் நேரத்தில் வெப்பநிலை குறைவாக பதிவானாலும், மேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசும். இதனால் உணர்வு வெப்பநிலை இயல்புக்கு அதிகம் இருக்கும். அதிக கூட்டம் காரணமாக நீரிழிப்பு பிரச்சனை ஏற்படலாம். மாநாட்டில் கலந்துகொள்வோர் அதிக தண்ணீர் குடித்துக்கொள்வது நல்லது. மழைபொழிவுக்கு நாளை விக்ரவாண்டியில் வாய்ப்புகள் இல்லை" என தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான மக்கள் கூடி, நீரிழப்பு பிரச்சனை காரணமாக மயங்கி விழுந்து 5 பேர் பலியாகினர், 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தவெக தலைமைக்கு ஷாக் தந்த நிர்வாகிகள்.. பாமகவில் திரண்டு வந்து இணைவு..! காரணம் என்ன?.