ஊரடங்கை மீறி காட்டுக்குள் இளைஞர்கள் செய்த செயல்! போலீசார் கொடுத்த அதிரடி தண்டனை..!
Village boys cooked in forest area
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 40000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்நோயால் 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நோயானது தற்போது இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மக்களுக்கு பல்வேறு விதமாக விழிப்புணர்வுகளையும் ஏற்ப்படுத்தி வருகிறது.
ஆனால் இந்த நோயின் தாக்கம் அறியாத கோவில்பட்டி கிராம இளைஞர்கள் 144 தடை உத்தரவை மீறி எல்லாரும் சேர்ந்து காட்டுக்குள் கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி கொரோனாவை கிண்டல் செய்து டிக்டாக் வீடியோவையும் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகவே அப்பகுதி போலீசார் அந்த இளைஞர்கள் அனைவரையும் அழைத்து 100 தடவை தோப்புக்கரணம் போட சொல்லியுள்ளனர். மேலும் கோவில்பட்டி கிராம மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வையும் ஏற்ப்படுத்தியுள்ளனர்.