காதலனுக்கு விஷம் கொடுத்தது என்? கைதான மாணவி பகீர் தகவல்.. கிறுகிறுத்துப்போன அதிகாரிகள்.!
காதலனுக்கு விஷம் கொடுத்தது என்? கைதான மாணவி பகீர் தகவல்.. கிறுகிறுத்துப்போன அதிகாரிகள்.!

அன்பு காதலனுக்கு டீயில் விஷம் வைத்து கொடுத்தது தொடர்பான விவகாரத்தில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது..
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளைஞர், ஆந்திராவில் உள்ள சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் வீட்டில் இ-சேவை மையமும் வைத்து நடத்தி வருகிறார். இதே பகுதியில், தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் 20 வயது மாணவி வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: காதலிக்க வேண்டும், திருமணம் செய்ய மாட்டியா? காதலனுக்கு டீ-யில் விஷம் வைத்த காதலி.! விழுப்புரத்தில் பகீர்.!
இருவரிடையே ஏற்பட்ட பழக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலாக மலர்ந்துள்ளது. ஒரே கிராமத்தில் இருந்ததால் நேரில் சந்தித்தும், போனிலும் காதலை மெருகேற்றி இருக்கின்றனர். இருவரின் காதல் விஷயம் இருதரப்பு பெற்றோருக்கு தெரியவர, அவர்கள் அண்ணன் - தங்கை உறவு என்பதால் காதல், திருமணம் கூடாது என கண்டிக்கப்பட்டுள்ளது.
டீயில் கலந்து கொடுத்தார்
இதனால் இளைஞர் பெண்ணுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். காதலில் உறுதியாக இருந்த மாணவி, காதலித்த நீயே தன்னை திருமணம் செய்ய வேண்டும் என உறுதியாக இருந்துள்ளார். இதனிடையே, சம்பவத்தன்று காதலனை வீட்டிற்கு அழைத்துவந்த காதலி, காலாவதியான எலி மருந்தை டீயில் கலந்து கொடுத்துள்ளார்.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட மாணவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். மாணவர் விஷம் குடித்து தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமாகவே, புகாரின் பேரில் மனைவி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துவ வகையில் இருந்தது.
அதிர்ச்சி வாக்குமூலம்
அந்த தகவலில், "நாங்கள் 2 ஆண்டுகளாக மனம்விட்டு காதலித்தோம். அண்ணன் - தங்கை உறவு என திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆசை ஆசையாக காதலித்தவரை கரம்பிடிக்க கூடாது என பெற்றோர் கூறினாலும், என்னால் அவரை மறக்க இயலாது. இதனால் திருமணம் செய்ய முடிவெடுத்தேன். இருவரில் யாரேனும் ஒருவர் விஷம் குடித்தாலும், பெற்றோர் நாங்கள் இறந்துவிடுவோம் என எண்ணி திருமணம் செய்துவைப்பார்கள் என நினைத்தேன்.
அதனை காதலரிடமும் தெரிவிக்க, அவரும் சம்மதம் கூறினார். நாங்கள் எங்களின் திட்டப்படி காதலனுக்கு டீயில் விஷம் ஐந்து கொடுக்க, அதனை குடித்த அவர் மயங்கினார். வாயில் நுரை தள்ளிய நிலையில் மருத்துவமனையில் உறவினர்கள் உதவியுடன் அனுமதி செய்தோம். அவரை கொலை செய்ய வேண்டும் என எனக்கு எண்ணம் இல்லை. அவருடன் வாழத்தான் அனைத்தையும் செய்தேன்" என பேசினார்.
.
காதலனுக்கு காதலி விஷம் கொடுத்ததற்கு வேறேதும் காரணம் இருக்கலாம் என அதிகாரிகள் சிந்தித்திருந்த வேலையில், திட்டமிட்டு இருவரும் அரங்கேற்றிய நாடகம் அம்பலமாகியுள்ளது.
காதல் எதையும் செய்யத் துணியவைக்கும் என்பது இதுதானோ? என்னவோ.
இதையும் படிங்க: #Breaking: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம்; பாஜக நிர்வாகி கைது.!