மனநலம் பாதிக்கப்பட்ட பயணியை தாக்கி, பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்ட தனியார் பேருந்து நடத்துனர்.!
பேருந்து நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த மனநலம் பாதிக்கப்பட்டவர், நடத்துனரால் தாக்கப்பட்டு பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பேருந்து நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த மனநலம் பாதிக்கப்பட்டவர், நடத்துனரால் தாக்கப்பட்டு பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றுக்கொண்ட தனியார் பேருந்து, கள்ளக்குறிச்சி நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் நடத்துனராக கொளப்பாக்கம் பகுதியை சார்ந்த வீரமணி (வயது 27) என்பவர் பணியில் இருந்துள்ளார்.
இதே பேருந்தில், கோமங்கலம் பகுதியை சார்ந்த கண்ணப்பன் (வயது 47) என்பவரும் பயணம் செய்த நிலையில், வீரமணி டிக்கெட் எடுக்க கூறியுள்ளார். கண்ணப்பனோ என்னால் டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறி தகராறில் ஈடுபட்டு இருக்கிறார்.
இதன்பின்னர், வாக்குவாதம் முற்றவே வீரமணி பேருந்தை நிறுத்தி, கண்ணப்பனை பேருந்தில் இருந்து இறங்குமாறு தெரிவித்துள்ளார். இந்த விஷயத்திற்கு கண்ணப்பன் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த வீரமணி கண்ணப்பனை அடித்து பேருந்தில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.
பின்னர், விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு கண்ணப்பனை வீரமணி அழைத்து சென்றுள்ளார். இந்த செயலை பேருந்தில் பயணம் செய்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யவே, வீடியோ வைரல் ஆகியுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த விருத்தாச்சலம் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து நடத்துனர் வீரமணியை கைது செய்தனர். மேலும், விசாரணையில் கண்ணப்பன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.