பொன்னாடை போர்த்த வந்த நிர்வாகிக்கு பளார் விட்ட முன்னாள் அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி.. அதிமுக பொதுக்கூட்டத்தில் ஷாக்.!
பொன்னாடை போர்த்த வந்த நிர்வாகிக்கு பளார் விட்ட முன்னாள் அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி.. அதிமுக பொதுக்கூட்டத்தில் ஷாக்.!

விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா சிறப்பிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். அவருக்கு கட்சியின் சார்பாக வெள்ளி வாள் ஒன்றும் பரிசாக அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கணவர் & குடும்பத்தினரின் தொல்லை; பெண் விபரீத முடிவு.. பெற்றோர் சோகம்.!
பின் கட்சியின் நிர்வாகிகள் பலரும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை போர்த்த முற்பட்டனர். அப்போது, விருதுநகர் மாவட்டம் பாண்டிய நகர் பகுதியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் மன்ற கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் குமார், பொன்னாடை போர்த்த முற்பட்டார்.
பலரும் வரிசையில் காத்திருந்த வேளையில், அவர் தன்னிச்சையாக முண்டியடித்து பொன்னாடை போர்த்த முற்பட்டதால், அதனை கவனித்த ராஜேந்திர பாலாஜி, ஆவேச வார்த்தையால் கடிந்து, திடீரென அவருக்கு பளார் விட்டார்.
இதனால் டென்ஷன் ஆகிய குமார் கே.டி ராஜேந்திர பாலாஜியிடம் வாக்குவாதம் செய்தார். பின் அங்கிருந்து புறப்பட்டார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: மனைவியை எரித்துக்கொன்று நாடகமாடிய கணவன்.. விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்.!