ஆசைகாட்டி மோசம் செய்த காதலன்; கர்ப்பம், கருக்கலைப்பால் இளம்பெண் கண்ணீர் குமுறல்..!
ஆசைகாட்டி மோசம் செய்த காதலன்; கர்ப்பம், கருக்கலைப்பால் இளம்பெண் கண்ணீர் குமுறல்..!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த கிராமத்தில் 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார்.
இளம்பெண்ணின் தந்த கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட, அவரின் தாயார் விவசாய கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். இளம்பெண்ணுக்கு 2 தங்கைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில், இளம்பெண்ணுக்கும் - கல்லூரணி பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 22) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே காதலை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், ஜெயக்குமார் இளம்பெண்ணிடம் நெருங்கி பழகி இருக்கிறார். இதனால் அவர் கர்ப்பமாகவே, ஜெயக்குமாரின் வற்புறுத்தலின் பேரில் கர்ப்பம் கலைக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
தன்னை திருமணம் செய்ய தொடர்ந்து வற்புறுத்திவர, ஜெயக்குமார் திடீரென மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்துபோன இளம்பெண் காதலனின் பெற்றோர் தாவீது (வயது 50), ஜெபமலர் (வயது 45), சகோதரி ஜான்சிமேரி (வயது 26) ஆகியோரிடம் பேசி இருக்கிறார்.
அவர்கள் ஜெய்குமாருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடப்பதாகவும், உன்னை திருமணம் செய்ய சம்மதிக்கமாட்டோம் எனவும் கூறி கொலை மிரட்டல் விடுத்துகின்றனர்.
இதனால் பெண்மணி எம். ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் ஜெயக்குமார், அவரின் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகிய 4 பேரின் மீது வழக்குப்பதிந்து, ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.