ரூ.200 அபாரதத்திற்கு எதிர்ப்பு.. காவல் ஆய்வாளரின் கழுத்தை அறுத்த கொடூரம்..!
ரூ.200 அபாரதத்திற்கு எதிர்ப்பு.. காவல் ஆய்வாளரின் கழுத்தை அறுத்த கொடூரம்..!
ஸ்ரீவில்லிபுத்தூரில் தலைக்கவசம் அணியாமல் வந்த நபருக்கு அபராதம் விதித்த காவல் அதிகாரியின் கழுத்தை அறுக்க முயன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் நகர போக்குவரத்து காவல் நிலையத்தில், சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தர்மராஜன். இவர் வடக்கு ரத வீதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக தனியார் நிறுவன ஊழியர் வெங்கடேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வருகை தந்துள்ளார். அவரின் வாகனத்தை நிறுத்திய தர்மராஜன், தலைக்கவசம் அணியாமல் வந்ததற்கு ரூ.200 அபராதம் விதித்துள்ளார்.
அபாரதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்த வெங்கடேஷ், தான் வைத்திருந்த சிறிய கத்தியால் காவல் ஆய்வாளரின் கழுத்தை லேசாக அறுத்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக சிறப்பு சார்பு ஆய்வாளர் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வெங்கடேஷை கைது செய்தனர்.