வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்ப்பு, நீக்கத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.!
வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்ப்பு, நீக்கத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.!
வார்டு கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் போன்றோரை தேர்வு செய்வதற்கு 18 வயதுக்கு மேல் உள்ள ஒவ்வொருவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை, இன்றளவில் ஆன்லைனில் புதுப்பிக்கும் அம்சங்களை பெற்றுள்ளது. அதன்படி, இணையவழியில் வாக்காளர் அடையாள அட்டையின் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளை மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வாக்காளர் அடையாள அட்டையை பெற விரும்பும் பயனர்கள், சந்தேகம் இருந்தால் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையின் 1950, 180042521950 என்ற நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.