அதிசயம்..! இயேசுநாதர் சிலையில் இருந்து வடிந்த நீர்..! தேவாலயத்தில் குவிந்த மக்கள்..! நெல்லை அருகே பரபரப்பு..!
Water leaked from Jesus statue at thirunelveli
கூடங்குளம் அருகே இயேசுநாதர் சிலையில் இருந்து நீர் வடிந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ளது கூத்தங்குழி கிராமம். இந்த கிராமத்தில் கிறிஸ்தவர்களின் தேவாலயம் ஓன்று அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தில் இயேசு நாதர் சிலையும் உள்ளது. தற்போது கிறிஸ்தவர்களின் தவக்காலம் என்பதால் பெரும்பாலான மக்கள் ஆலயத்திற்கு வந்து தினமும் இயேசுவை வழிபாடு செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று திடீரென இயேசு நாதர் சிலையின் கால்களில் இருந்து தண்ணீர் வடிந்துள்ளது. இதைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்த மக்கள், அந்த நீரை குடித்தும், உடலில் பூசியும் வழிபட்டனர். இன்று நீர் தொடர்ந்து வழிந்ததால் இந்த தகவல் மற்ற பகுதிகளும் தீயாய் பரவியது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் இருக்கும் கிராம மக்களும் தேவாலயத்துக்கு வந்து சிலுவை நாதரை வழிபட்டு செல்கின்றனர்.
மேலும், இயேசு சிலையில் இருந்து நீர் வடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.