×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள்; பா.ஜனவினர் உயிருடன் உலவ முடியாது!!,, சர்ச்சையை உருவாக்கிய ஆர்.எஸ்.பாரதி..!!

மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள்; பா.ஜனவினர் உயிருடன் உலவ முடியாது!!,, சர்ச்சையை உருவாக்கிய ஆர்.எஸ்.பாரதி..!!

Advertisement

தமிழக பாஜகவுக்கும் ஆளும் கட்சியான திமுகவும் தொடர்ந்து மோதல் போக்கை கையாண்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே திமுக சார்பில்  பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார். 

கூட்டத்தில் பேசிய ஆர் எஸ் பாரதி, நான் அரசியலுக்கு வந்தபோது, அண்ணாமலையின் தந்தை கூட பிறந்திருக்கமாட்டார். ஆனால் அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகளுக்கு இப்போது பதில் கூற வேண்டி இருக்கிறது.  சிலருக்கு, திராவிடம் என்ற சொல்லைக் கேட்டால் வேப்பம் காயாக கசக்கிறது. 

எனவே தான் இது திராவிட மாடல் ஆட்சி என்று ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். அண்ணாலை என்ன பேசுகிறார், எதை பேசுகிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. இவருக்கு எப்படி ஐ.பி.எஸ் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. 

அண்ணாமலை சொல்வதில் ஒன்று கூட உண்மையில்லை. ஜெயலலிதாவின் ஆளுமையுடன் அவருடைய தாய் மற்றும் மனைவியுடன் ஒப்பிட்டு பேசுகிறார். அண்ணாமலை மிரட்டலாம் என்று நினைக்கிறார். நாங்கள் இந்திரா காந்தியை பார்த்தவர்கள், மிசாவை சந்தித்தவர்கள் மற்றும் சர்காரிய கமிஷனை தவிடு பொடியாக்கிய கட்சி எங்கள் கட்சி என்பதை அண்ணாமலை உணர்ந்து கொள்ள வேண்டும். இதையே தொடர்ந்தால் பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது  என்று கூறினார்.

ஆர் எஸ் பாரதியின் இந்த பேச்சு பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திமுகவின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது என்று தூத்துக்குடியில் பேசியுள்ளார். சட்ட மன்றத்தில் கொலை நடந்தாலும் வழக்கு தொடுக்க முடியாது என்றும், ஆளுநரை கொலை செய்வோம் என்று மிரட்டியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மௌனம் காத்தார். 

தற்போது பாஜகவினரை கொலை செய்வோம் என்று மிரட்டி இருக்கும் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய உத்தரவிட வேண்டும். ஆளும் கட்சி என்ற ஆணவத்தில், திமிரில் இது போன்று வன்முறையை தூண்டி சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் முயற்சியில் ஆர் எஸ் பாரதி பேசிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இது போன்ற கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது, அரசு நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த முடியாத காரணத்தால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் கெடுக்க ஆளும் திமுகவே முயற்சி செய்கிறது என்று எண்ணத்தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #politics #RS Bharati #bjp #Clash
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story