அலார்ட்: இன்று சென்னையில் கனமழை உறுதி! தமிழ்நாடு வெதர்மேன் புதிய அப்டேட்
Wettest day in chennai weatherman update

இன்று 25.07.2019 வியாழக்கிழமை சென்னையில் அதிகப்படியான மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், "வெப்ப சலனம் காரணமாக இந்த வருடம் சென்னையில் நல்ல மழை பெய்து வருகிறது. இது மேலும் நீடிக்கவுள்ளது. குறிப்பாக இன்று சென்னையில் அதிகப்படியான மழை பெய்யபோகிறது.
இந்த மழையானது அடுத்த இரண்டு நாட்கள் இரவில் நீடிக்கும். மேலும் இடியும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையால் சென்னையில் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது.
இத்தனை நாட்கள் மழை பெய்தும் ஏரிகளில் நீரின் அளவு உயர்ந்தபாடில்லை. நிச்சயம் இன்று மழை நீர் சேகரிப்பு முறைகளை நாம் கையாள வேண்டும். காலையில் இருக்கும் தூறல் சில மணி நேரங்களுக்கு பிறகு நின்றுவிடும்" என பதிவிட்டுள்ளார்.