தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட பாவமே! இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்த பெண் பலி.. கதறும் குடும்பத்தினர்..!

அட பாவமே! இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்த பெண் பலி.. கதறும் குடும்பத்தினர்..!

What a pity! A woman who tripped and fell into a ditch while riding a two-wheeler died.. The family is crying..! Advertisement

உத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் சசிசாமுவேல் -  ரேச்சல் ரோக்சனா தம்பதியினர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ரேச்சல் எங்கு சென்றாலும் தனது இருசக்கர வாகனத்தில் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று ரேச்சல் ரோக்சனா அருகில் இருந்த கடைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ரேச்சல் ரோக்சனா லாடகரணை பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.

accident

மேலும் சாலையில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் நீண்ட நேரம் கழித்து அவ்வழியாக சென்ற நபர்கள் பள்ளத்தில் விழுந்து கிடந்த ரேச்சல் ரோக்சனாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு ரேச்சல் ரோக்சனாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரேச்சல் ரோக்சனாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #women died #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story