தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படுகிறது? அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!
When will open schools
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல கட்டங்களாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக பள்ளி கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டன. இதனையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கவில்லை. மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 23-ந்தேதி அறிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் , இன்று தலைமைச் செயகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்தும் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.