×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..? ஆதி தமிழனின் விஞ்ஞான அறிவு..பயன் தெரிந்தால் ஆடிபோவீர்கள்..!

ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..? ஆதி தமிழனின் விஞ்ஞான அறிவு..பயன் தெரிந்தால் ஆடிபோவீர்கள்..!

Advertisement

நவீன வெள்ள அபாய எச்சரிக்கை இருக்கும் முன்னரே, தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள். அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்.

இந்த மண்டபம் எதற்கு என யோசித்தது உண்டா..?

தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது.

அதன் உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் சத்தத்தால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்பட்டு சத்தம் மக்களை அடையும். இதனை வெள்ள அபாய அறிவிப்பாக மக்கள் அறிந்து, மக்கள் மேடான இடங்களுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்வர்.

வெள்ளம் மிக அதிகமானால் மண்டபத்தின் சங்கு அமைப்பினை மூழ்க செய்யும்... பின்பு வெள்ளம் வடிகின்ற போது, சங்கு சத்தத்தினை வெள்ளத்தால் ஏற்படுகின்ற காற்று உண்டாக்கும்.

சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி என மக்கள் அறிந்து, பின்னர் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. அரசும் இது எதற்கு என புதுபிக்க மறந்துவிட்டதா..?

ஒரு சில இடங்களில் மட்டும் இந்த மண்டபங்கள் இருக்கின்றன. ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை, ஏனெனில் அந்த காலத்தில் பராமரிப்பு இருந்தது.இந்த காலத்தில் இதன் பயனே பலருக்கு தெரியாது, ஏதோ அழகுக்கு தமிழன் கட்டிவைத்தான் என பலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் உண்மையில் அறிவியலுக்காக.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#river #Build #Center
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story