கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி எடுத்த விபரீத முடிவு... தாம்பரம் அருகே பரபரப்பு!!
கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி எடுத்த விபரீத முடிவு... தாம்பரம் அருகே பரபரப்பு!!
தாம்பரம் அடுத்த நீலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் (67) - உஷாராணி(63) தம்பதியினர். இதில் அகஸ்டின் வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு காலம் ஆகியுள்ளார். இதனால் உஷாராணி மிகவும் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் கழிவறைக்கு சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். உஷாராணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
அங்கு உஷாராணிக்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.