×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சாலையில் இருந்த பள்ளம்:கணவன் கண்முன்னே துடி துடித்து இறந்த மனைவி... அலறி துடித்த கணவன்!

wife died in accident front of husband

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவர் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்துள்ளார்.  இவருக்கு தேவி என்ற பெண்ணுடன் திருமணமாகி வசித்துவந்துள்ளார். இந்நிலையில் ராமதாஸ் தன் மனைவியுடன் நசரதேபேட்டைக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்தார்.

கடந்த ஒரு வாரங்களாக தமிழத்தில் மழை பெய்திருந்ததால் அந்த சாலையில் இருந்த பள்ளத்தில் மழைநீர் இருந்ததால், பள்ளம் இருந்தது தெரியாமல் இருசக்கர வாகனத்தை பள்ளத்தில் இறக்கியுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் தடுமாறியதால் பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மீது மோதி இருவரும் கீழே விழுந்தனர்.

இதில் தேவியின் உடல் மீது கண்டெய்னர் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் ராமதாஸ் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், தன் மனைவி கண்முன்னே துடி துடிக்க இறந்ததால் அதைக் கண்டு கதறி அலறல் சத்தம் போட்டுள்ளார். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #wife died
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story