×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவன் வெளியில் செல்லும் நேரத்தில் எல்லாம் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.! கண்டித்த கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்.!

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கோதண்டபாணி. 36 வயது நிரம்பிய இவருக்கு நிரோஷா என்ற பெண்ணுட

Advertisement

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கோதண்டபாணி. 36 வயது நிரம்பிய இவருக்கு நிரோஷா என்ற பெண்ணுடன் திருமணமாகி, இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் நிரோஷா திடீரென அலறல் சத்தம் போட்டுள்ளார்.

நிரோஷாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது கோதண்டபாணி ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கேட்டபோது மர்ம நபர்கள் தனது கணவனை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிவிட்டதாக சடலம் அருகில் இருந்தபடி அழுதுகொண்டே கூறியுள்ளார்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கோதண்டபாணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரித்தபோது, மொட்டை மாடி வழியாக யாரோ மர்மநபர்கள் வந்து கொலை செய்து விட்டார்கள் என்று நிரோஷா கூறியுள்ளார். ஆனால் அங்கு மர்ம நபர்கள் வந்து சென்றதற்கான தடயம் எதுவும் இல்லை.

இதனால் சந்தேகமடைந்து நிரோஷாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. நிஷாவுக்கு மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கோதண்டபாணி வெளியில் சென்ற நேரத்தில், மணிகண்டன் அவரது வீட்டுக்குள் புகுந்து இருவரும் உல்லாசத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் கோதண்டபாணிக்கு தெரியவந்தது. இதனையடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் நிரோஷா-மணிகண்டன் ஆத்திரமடைந்து கோதண்டபாணியை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவில் மணிகண்டனை நிரோஷா வீட்டுக்கு வரவழைத்துள்ளார். பின்னர் தூங்கி கொண்டிருந்த கோதண்டபாணியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி ஓடியுள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள மணிகண்டனை போலீசார் தேடிவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Husband #Wife #Murder #illegal affair
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story