×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தோசையில் இருந்த ஆபத்து புரியாமல் ஆசையாக சாப்பிட கணவன்! காலையில் உயிரை விட்ட துயரம்.

Wife killed husband in chennai puzhal

Advertisement

சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். அந்த பகுதியில் உள்ள கறிக்கடை ஒன்றில் வேலைபார்த்துவரும் இவருக்கும் அனுஷ்யா என்ற பெண்ணிற்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் தனது கணவன் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டதாக புழல் காவல் நிலையாயத்திற்கு அனுஷ்யா போன் செய்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷ் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளதாகவும், அவரது கழுத்து பகுதியில் காயம் இருப்பதால் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து சுரேஷின் மனைவி அனுஷ்யாவை போலீசார் விசாரித்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் விசாரணையை தீவிர படுத்திய போலீசார் அனுஷ்யாதான் கணவரை கொலை செய்தார் என்பதை கண்டுபிடித்தனர்.

இதுபற்றி அனுஷ்யா கூறுகையில் அனுஷ்யாவின் சகோதர முறை நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் தன் மீது சந்தேகம் அடைந்து தினமும் தனது கணவர் குடித்துவிட்டு தன்னை கொடுமை படுத்தியதாகவும், இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அவர் தூங்கியதும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் அனுஷ்யா கூறியுள்ளார்.

மேலும், இந்த கொலைக்கு முரசொலி உதவியதாகவும், சகோதர முறை உறவினருடன் தன்னை இணைத்து சந்தேகப்பட்டதும்தான் கொலை செய்ய முக்கிய காரணம் என கூறியுள்ளார் அனுஷ்யா.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அனுஷ்யாவை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தலைமறைவாக உள்ள முரசொலியை தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Crime news #wife killed her husband
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story