கணவனை வேலைக்கு செல்லுமாறு கூறிய மனைவி.! கணவன் சொன்ன ஒத்த வார்த்தை.! பரிதாபமாக உயிரைவிட்ட மனைவி.!
போளூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராஜேந்திரன் என்பவருக்கும், பக்கத்துக்கு கிராமத்தைச் சேர்ந்த
போளூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராஜேந்திரன் என்பவருக்கும், பக்கத்துக்கு கிராமத்தைச் சேர்ந்த திலகவதி என்ற பெண்ணிற்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்தநிலையில் ராஜேந்திரன் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்தநிலையில் ராஜேந்திரன் பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது.
இந்தநிலையில், இவரிடம் கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜேந்திரனை வேலைக்கு செல்லுமாறு அவரது மனைவி திலகவதி கூறியுள்ளார். இதனையடுத்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ராஜேந்திரன், திலகவதியிடம் உன் பெற்றோர் வீட்டுக்குச் சென்று பணம் வாங்கி வா என கோவமாக பேசியுள்ளார்.