மடியில் படுக்க வைத்து, கணவனுக்கு கொஞ்சி கொஞ்சி நஞ்சை ஊட்டிய மனைவி.! பின் நேர்ந்த விபரீதம்!!
wife try to kill husband
ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை தாவுக்காட்டில் வசித்து வருபவர் ராமசாமி. இவருக்கு அத்தியூத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருடன் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில் குழந்தை இல்லாததால் ராமசாமி மற்றும் பஞ்சவர்ணம் இருவருக்குமிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் இதனால் பஞ்சவர்ணம் தனது கணவருடன் சண்டை போட்டுகொண்டு வீட்டை விட்டு வெளியேறிய போது உறவினர்கள் சமாதானம் செய்து திரும்ப அனுப்பி வைத்துள்ளனர்.
இருப்பினும் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஒருகட்டத்தில் மனம்வெறுத்து போன பஞ்சவர்ணம் ராமசாமியை உணவில் விஷம் வைத்துக் கொல்ல திட்டமிட்டு, தக்காளி சாதம், முட்டை பொறியல், ரசம் சமைத்து அதில் எலிமருந்தை சேர்த்துள்ளார்.
பின்னர் தனது கணவர் ராமசாமியை தன்னுடைய மடியில் படுக்க வைத்து, நீ தான் எனக்குப் பிள்ளை என்று கொஞ்சிய படியே அவருக்கு சாப்பாடு ஊட்டிவிட்டுள்ளார். பின்னர் ராமசாமியின் சகோதரர் கணேசனின் வீட்டிற்குச் சென்று, உங்க சகோதரருக்கு விஷம் கலந்த உணவை கொடுத்துவிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்து விடுவார் என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன், விரைந்து தனது அண்ணனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் பஞ்சவர்ணத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.