பூட்டிய வீட்டில் முகம் சிதைந்த நிலையில் பெண் சடலம்... கணவருக்கு வலைவீச்சு.!
பூட்டிய வீட்டில் முகம் சிதைந்த நிலையில் பெண் சடலம்... கணவருக்கு வலைவீச்சு.!
தென்காசியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தென்காசி நடுமாதாங்கோயில் தெருவில் அமைந்துள்ள சுப்பிரமணி என்பவரது வீட்டில் சந்திரன் மற்றும் சித்ரா தம்பதியினர் கடந்த 10 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் வசித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பொதுமக்களின் தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை பூட்டி இருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீட்டின் கட்டிலில் சித்ரா கட்டி வைக்கப்பட்ட நிலையில் முகம் சிதைந்து அழுகிய நிலையில் பிணமாக காணப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தடையைவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். அதன் பிறகு அவரது அழுகிய சடலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மற்றும் மனைவி இருவர் வாழ்ந்து வந்த வீட்டில் மனைவி மட்டும் கை கால்கள் கட்டப்பட்டு முகம் சிதைந்து இறந்து கிடந்ததால் அவரது கணவர் தான் இவரை கொலை செய்திருக்க வேண்டும் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அவரது கணவர் சந்திரனை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.