வேலியே பயிரை மேய்ந்த கதை... பெண் விடுதிக்காப்பாளரின் மீது பாய்ந்த போக்சோ சட்டம்.!
நாகப்பட்டினத்தில் அதிர்ச்சி வேலியே பயிரை மேய்ந்த கதை... பெண் விடுதிக்காப்பாளரின் மீது பாய்ந்த போக்சோ சட்டம் !
நாகப்பட்டினம் அருகே உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி உள்ள 12 வயது சிறுவனிடம் வாடி என் சீண்டலில் ஈடுபட்டதாக அந்தக் காப்பகத்தின் பெண் காப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி என்ற பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முகாம் அருகே தனியார் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் குடும்பம் என்ற அமைப்பில் வசித்து வருகின்றனர். இந்த காப்பகத்தில் சீர்காழியைச் சார்ந்த நற்பது வயது பெண் ஒருவர் காப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்தப் பெண் 12 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் ஒரு குடும்பமாக அங்கு வசித்து வந்தனர்.
இந்நிலையில் அந்த காப்பகத்தைச் சார்ந்த 12 வயது சிறுவன் திடீரென சுவர் எரி குதித்து தப்பிச்செல்ல முயன்றிருக்கிறான். இது தொடர்பாக காப்பக நிர்வாகிகள் அவனை பிடித்து விசாரித்த போது காப்பகத்தின் பின் காப்பாளர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் மன அழுத்தம் ஏற்பட்டு அங்கிருந்து தப்பிச்செல்லும் முயன்றதாக தெரிவித்துள்ளான்.
இது தொடர்பாக காப்பக நிர்வாகிகள் நடத்திய விசாரணையில் சிறுவன் கூறிய குற்றச்சாட்டு ஊர்ஜிதம் ஆகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து காப்பக நிர்வாகிகள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் விடுதிக்காப்பாளரான அந்த 40 வயது பெண்மணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தது காவல்துறை. மேலும் அந்தப் பெண் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.