பாய்ந்தோடும் வெள்ளப்பெருக்கில் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றை கடந்த வீரபெண் , வெளியான அதிர வைக்கும் காரணம்.!
பாய்ந்தோடும் வெள்ளப்பெருக்கில் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றை கடந்த வீரபெண் , வெளியான அதிர வைக்கும் காரணம்.!
ஈரோடு மாவடட்டத்தில் இருக்கும் சத்தியமங்கலம் அருகே மாயாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருக்கும் நிலையில் திருமணத்திற்காக புதுமணப்பெண் உயிரை பணயம் வைத்து பரிசலில் சவாரி செய்யிது ஆற்றைக் கடந்து வந்துள்ளார்.
சத்தியமங்கலம் அருகே காட்டுப்பகுதியில் உள்ள தெங்குமரஹடா என்கிற கிராமத்தில் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.
இந்நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த ராசாத்தி என்கிற பெண்ணுக்கும் கோவை மாவட்டம் ஆலாங்கொம்பைச் சேர்ந்த ரஞ்சித்குமாருக்கும் வரும் 20 -ஆம் தேதி ( திங்கட்கிழமை) திருமணம் நடைபெறயிருக்கிறது.
மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுயிருக்கும் நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த மக்களும் வனத்துறையினரும் இணைந்து புதுமணப்பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் பரிசலில் ஏற்றி, ஆற்றின் மறுபக்கத்தில் கரைசேர்த்தனர்.