கஞ்சா விற்றவரை மக்கள் போற்றும் மனிதராக மாற்றிய பெண் இன்ஸ்பெக்டர்! குவிந்துவரும் பாராட்டுகள்!
women inspector chenged kanja salesman lifestyle
மதுரை, மகபூப்பாளையத்தை சேர்ந்தவர் இப்ராகிம்ஷா என்பவர் கஞ்சா வியாபாரன் செய்துள்ளார். 54 வயது இநரம்பிய இவர் மீது மதுரை காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இவர் வழக்கமாக கஞ்சா விற்பனை செய்து போலீசில் சிக்குவதும், பின்னர் ஜாமீனில் வெளிவருவமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், மதுரை திலகர் திடல் காவல்நிலைய பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா, இப்ராகிம்ஷாவிடம் அறிவுரை கூறியுள்ளார். அதில் ‘‘இந்தியாவின் எதிர்காலமாக இருக்கும் இளைங்கர்கள், நீங்கள் விற்கும் கஞ்சாவை வாங்கிப் பயன்படுத்தி, தங்களின் எதிர்காலத்தையே தொலைத்து விடுகிறார்கள். அதுமட்டுமின்றி அவர்களது குடும்பமும் நடுத்தெருவுக்கு வருகிறது. எனவே இதிலிருந்து நீங்கள் மீண்டு விட வேண்டும்" என கூறியுள்ளார்.
இதனையடுத்து இப்ராகிம்ஷா திருந்தி வாழ்வதற்கு உதவியாக அவர் ஆரம்ப காலத்தில் செய்து வந்த உப்பு வியாபார தொழிலை மீண்டும் செய்வதற்கு வசதியாக ரூ.7 ஆயிரம் மதிப்பில் ஒரு புதிய சைக்கிள், உப்பு மூட்டை ஒன்றும் தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தார். இதனைப் பெற்றுக்கொண்ட இப்ராகிம்ஷா தற்போது வெகு உற்சாகத்துடன் இப்பகுதியில் கூவி கூவி உப்பு விற்று வருகிறார்.
இதுகுறித்து இப்ராகிம்ஷா கூறுகையில், தற்போது என்னை போலீசார்களும், பொதுமக்களும் கைகுலுக்கி பாராட்டுகின்றனர். எனவே என்னைப்போல குற்றங்களில் இருப்பவர்கள் திருந்தி வாழ வேண்டும் என கூறியுள்ளார். இப்ராகிம்ஷாவிற்கு உழைப்பதற்கு வழிகாட்டிய பெண் இன்ஸ்பெக்டர் ஷீலாவுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.