ஒரு பக்கம் வறுமை., மறுபக்கம் குரூப்4 தேர்வு கனவு.. தேர்வு எழுதிவிட்டு மகளை கொன்று தாய் தற்கொலை..!!
ஒரு பக்கம் வறுமை., மறுபக்கம் குரூப்4 தேர்வு கனவு.. தேர்வு எழுதிவிட்டு மகளை கொன்று தாய் தற்கொலை..!!
வறுமையின் காரணமாக குரூப்4 தேர்வு எழுதிய பெண்மணி தனது மகளை கொன்று, தானும் தூக்கில் தொங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் அலங்கியம் காமராஜர் நகரில் வசித்து வருபவர் வசித்து வந்தவர் காளிதாஸ் (வயது 28). இவர் கடந்த 6 வருடத்திற்கு முன்னதாக பொள்ளாச்சியில் உள்ள தனியார் நூற்பாலையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த நிலையில், விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவருக்கு பூங்கொடி என்று 25 வயது மனைவியும், வர்ஷா என்ற 10 வயது மகளும் இருந்தனர். இருவரையும் விட்டுவிட்டு காளிதாஸ் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கணவரின் மரணத்திற்கு பின்னர் பூங்கொடி தனது தாயாரின் வீட்டில் வறுமையில் வாடி வந்துள்ளார். குடும்பத்திற்காக பூங்கொடி பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வந்தநிலையில், மகள் வர்ஷா அலங்கியம் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
பூங்கொடி அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற முயற்சியில் இருந்ததால் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தயாராக இருந்த நிலையில், கடந்த இரண்டு மாதமாக வேலைக்கு கூட செல்லாமல் வீட்டிலேயே இருந்து படித்து வந்துள்ளார். இதனால் குடும்பம் கடுமையாக வாடி வந்த நிலையில், நேற்று குரூப் 4 தேர்வு எழுதியவர் காலையில் யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது மகளை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்து, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
மகள் மற்றும் பேத்தி தூக்கில் பிணமாக தூங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பூங்கொடியின் தாயார் சரஸ்வதி கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்துவிட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த அலங்கியம் காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வறுமையின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.