அள்ளி அள்ளி கொடுத்த எஜமானியை கொன்ற வேலைக்காரி.! அதிரவைக்கும் சம்பவத்தின் பின்னணி.!
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாக்குலின் மேரி(65). இவ
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாக்குலின் மேரி(65). இவரது கணவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்த நிலையில், தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் ரயில்வே துறையில் டிடிஆர் ஆக பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில், கடந்த 15 ஆம் தேதி ஜாக்குலின் மேரியின் மகன் பிராங்கிளின் பணிக்கக சென்றுள்ளார். இந்தநிலையில் ஜாக்குலின் மேரியை வேலைக்கார பெண் ஆரோக்கிய டென்சி என்பவர் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16-ஆம் திகதி பிராங்கிளின் தனது தாய் ஜாக்குலின் மேரியின் போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். பலமுறை போன் செய்தும் அவர் போனில் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பிராங்கிளின் தனது வீட்டின் மாடியில் குடியிருக்கும் நபருக்கு போன் செய்து , எனது அம்மா போனை எடுக்கவில்லை தன்னுடைய அம்மாவிடம் சென்று போனை கொடுக்கும் படி கூறியுள்ளார். அப்போது அவர்கள் வீட்டில் சென்று பார்த்த போது, ஜாக்குலின் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இது குறித்து பிராங்கிளினுக்கு தெரிவித்துள்ளனர்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பிராங்கிளின், உடனடியாக வீட்டிற்கு வந்துள்ளார். தனது தாய்க்கு, வலிப்பு நோய் இருப்பதால் அதனால் உயிர் இழந்திருக்ககூடும் என்று நினைத்து இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், இறுதிச்சடங்கின் போது, அவர் தாய் அணிந்திருந்த செயின், வளையல் ஆகியவை காணமல் போயுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பிராங்கிளின் இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜாக்குலின் மேரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. இதனையடுத்து அவருடன் இருந்த வேலைக்கார பெண்ணான ஆரோக்கிய டென்சியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, ஜாக்குலின் மேரியை ஐந்தரை பவுன் நகைக்காக கொலை செய்ததாகவும், அவரது தொலைபேசியை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, இதை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், ஆரோக்கிய டென்சியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.