×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜன்னலோர ரயில் பயணம்..! சட்டென விழுந்த இரும்பு ஜன்னல்..! குழந்தையுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

Women passenger finger cut in cholan express

Advertisement

ரயிலில் பயணம் செய்த பெண் பயணி ஒருவரின் கைவிரல் துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி சரண்யா. சரண்யா கடந்த திங்கள் கிழமை தனது 5 வயது மகளுடன் மயிலாடுதுறையில் உள்ள தாய் வீட்டுக்கு  சோழன் விரைவு ரயிலில் சென்றுள்ளார்.

ரயில் கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் என்னும் பகுதியில் வந்தபோது சரண்யா அமர்ந்திருந்த இருக்கையின்  ஜன்னல் கதவு திடீரென விழுந்துள்ளது. சரண்யா ஜன்னலில் கைவைத்திருந்த நிலையில் பயணம் செய்ததால் இரும்பு ஜன்னல் அவரது கையில் விழுந்ததில் அவரது கைவிரல் துண்டாகியுள்ளது.

சரண்யாவின் அலறல் சத்தம் கேட்ட சக பயணிகள் துணிகளை வைத்து சரண்யாவின் கைவிரலை கட்டியுள்ளனர். பின்னர் இது குறித்து டிக்கெட் பரிசோதகரிடம் விவரத்தை கூறி, அவரிடம் முதலுதவி பெட்டி கேட்டுள்ளனர். ஆனால், முதலுதவி பெட்டி இல்லை என TTR கூறியதாக தெரிகிறது.

இதனை அடுத்து மயிலாடுதுறை ரயில் நிலையம் வந்ததும், அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். மேலும், அணைத்து பெட்டிகளிலும் முதலுதவி பெட்டி கட்டாயம் வைக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#train accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story