×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா சமயத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவிய பெண் இன்ஸ்பெக்டர்! பாராட்டித்தள்ளும் பொதுமக்கள்!

Women police inspector helped pregnant lady

Advertisement

சென்னை திருவொற்றியூரில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரே போலீஸ் வாகனத்தில் மருத்துவமனையில்  சேர்த்து உதவி செய்தார். அந்த பெண் போலீசாரை பலரும் பாராட்டி உள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் புவனேஸ்வரி. இவர், நேற்று முன்தினம் மாலை திருவொற்றியூர் பகுதியில் போலீஸ் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். 


அந்த சமயத்தில் ஒரு சிலர் பரபரப்பாக ஓடி வந்தனர். இதைபார்த்த குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி, தனது வாகனத்தை நிறுத்தி அவர்களிடம் ஏன் இவ்வாறு ஓடுகிறீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள், கலைவாணி என்ற நிறைமாத கர்ப்பிணி பிரசவ வலியால் துடிக்கிறார். நாங்கள் போன் செய்தும் 108 ஆம்புலன்ஸ் இன்னும் வரவில்லை. ஊரடங்கு உத்தரவால் வேறு எந்த வாகனங்களும் கிடைக்கவில்லை. எங்களுக்கு உதவுங்கள் என கேட்டுள்ளார். இதையடுத்து ஆய்வாளர் புவனேஸ்வரி அவர் வந்த போலீஸ் வாகனத்தில் கர்ப்பிணி ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ராயபுரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிறிது நேரத்தில், அந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு சிறிது நேரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. சரியான நேரத்தில் ஆய்வாளர் புவனேஸ்வரி உதவி செய்ததால் அந்த பெண் மற்றும் குழந்தையை காப்பாற்ற முடிந்தது என பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து உதவி செய்த பெண் ஆய்வாளர் புவனேஸ்வரியை போலீஸ் உயர் அதிகாரிகளும், அந்த பெண்ணின் குடும்பத்தினர் பாராட்டினர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#police #Helped #pregnant lady
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story